0
விருமாண்டி’ஹிட்டுடன் கோடம்பாக்கத்திலிருந்து மூட்டை கட்டிய அபிராமி திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அங்கு மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்த அபிராமி டார்கெட் எதுவுமின்றி இருந்தார்.
அமெரிக்க வாழ்க்கை போரடிக்கத்தொடங்கிய நேரத்தில்தான் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு டப்பிங் பேச அழைத்து வந்தார் கமல். தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’ என வாய்ஸ் கொடுத்த அபிராமிக்குள் மீண்டும் சினிமா ஆசை தொற்றிக்கொண்டது. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் தமிழில் ‘36 வயதினிலே’ படத்திலும் நடித்து முடித்தார்.
டப்பிங் பேச வாய்ப்பு கொடுத்த கமல் ‘தூங்காவனம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பார் என நம்பி காத்திருந்த அபிராமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ’பாபநாசம்’ ஆஷா சரத்தை கொத்திக்கொண்டு 

ஷூட்டிங்கிற்காக துபாய் பறந்துவிட்டார் கமல். இது உங்களுக்கு ஏமாற்றமில்லையா? என்று அபிராமியிடம் கேட்டால் ‘எந்த கேரக்டரை யாருக்கு எப்போ கொடுக்கணும் என்பது கமலுக்கு தெரியும். அவர் நல்ல வாய்ப்பு கொடுப்பார்னு நம்பிக்கை இருக்கு.’ என சூடாக்கும் கேள்விக்கும் கூலாக பதில் சொல்லி தப்பிக்கிறார். அபிராமி.. அபிராமி..

Post a Comment Blogger

 
Top