0
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் காதலர்களின் நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

நேற்று பிற்பகலில் சுற்றுலா பயணிகள் தாஜ்மகால் வளாகத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது தாஜ்மகால் கோபுரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடந்து சென்ற ஒரு ஜோடி திடீர் என்று பிளேடால் தங்களது கழுத்தை அறுத்துக் கொண்டனர்.

இதைப்ப பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த காதல் ஜோடியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் இருவரும் அபாய கட்டத்தை தாண்டினர். அதன் பிறகு விசாரணை நடத்தப்பட்டதில் இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது.

காதலன் ராஜ்வீர் சிங் இந்து மதத்தைச் சேர்ந்தவர். பூர்வீகம் டேராடூன். ஆக்ராவில் வசிக்கிறார். காதலி ஷப்னம் அலி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆக்ராவில் வசிக்கிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வழியாக இருவரும் பெற்றோருடன் பேசி சமரசம் செய்தனர். அவர்களும் மனம் இறங்கி காதலர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். ஆனால் சுற்றி இருப்பவர்களும், உறவினர்களும் மதத்தை காரணம் காட்டி திருமணத்துக்கு தடை போட்டனர். இதனால் பெற்றோர்களும் திருமணத்துக்கு அனுமதி மறுத்து விட்டனர்.

இதனால் இருவரும் தாஜ்மகால் சென்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதைக் கேள்விப்பட்டு உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் திருமணத்துக்கு நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால் காதலன் ராஜ்வீர் வேலை எதுவும் இல்லாமல் இருந்தார்.

எனவேதான் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என்றனர். இது தொடர்பாக ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment Blogger

 
Top