0
முத்துப்பேட்டை: செங்கற்சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வரவேற்ப்பை பெற்றுள்ளது.  முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில்  வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார். இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி  மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி  மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது.

அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரிவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் செயல் விளக்க  நிகழச்சியை ஆலங்காடு செங்கற்சூளை பகுதியில் மாணவி ஆர்த்தி செய்து காட்டினார். இந்த மாணவியின் அறிய கண்டுபிடிப்பை செங்கற்சூளை  தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வியந்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியை மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாணவியின் இந்த கண்டுபிடிப்பு கடந்த 11ம் தேதி மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிளான அறிவியல்  கண்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment Blogger

 
Top