0
இணையத்தள பயன்பாடு நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
இன்டர்நெட் பயன்பாட்டில் எந்த ஒரு வெப்சைட்டுக்கும் அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது இணையத்தள சமநிலையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகியவற்றை பயன்படுத்தி போனில் பேசுவதற்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று டிராயிடம் வேண்டுகோள் விடுத்தன. இதற்கு இணையத்தள ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து மத்திய அரசு, மத்திய தொலைத் தொடர்புத்துறை ஆலோசகர் பார்கலா தலைமையில் இது பற்றி ஆய்வு நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இணைய சமநிலை கொள்கையை கடைபிடிக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் தரமான பிராட்பேண்ட் வசதி கிடைக்க வேண்டும். ஜீரோ ரேட்டிங் திட்டம் டிராய் ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டும். வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற இன்டர்நெட் வழி போன் அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக செல்போன் அழைப்பு கட்டணங்களும் இன்டர்நெட் வழி அழைப்பு கட்டணங்களும் ஒரே சீராக இருக்கும் வகையில் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று 6 பேர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை காரணமாக எதிர்காலத்தில் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாக இனி போனில் பேச முடியாது என்று தெரிய வந்துள்ளது.
தற்போதைய செல்போன் கட்டணத்துக்கு இணையாக, இன்டர்நெட் வழி அழைப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
என்றாலும் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகியவற்றை பயன்படுத்தி குறுஞ் செய்திகளை இலவசமாக தொடர்ந்து அனுப்பலாம். அதற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இன்டர்நெட் வழி அமைப்புகளை பயன்படுத்தி சர்வதேச அளவில் தொடர்ந்து இலவசமாக பேசலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அழைப்புகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தொடர்பாக ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment Blogger

 
Top