0
ஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இத்தாலியில் உள்ள மிலன் என்னும் பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். அங்கு அஜித் மற்றும் சுருதிஹாசன் சம்மந்தப்பட்ட பாடல்கள் மற்றும் வில்லன் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கினர்.

தற்போது இத்தாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று இந்தியாவுக்கு புறப்பட்டனர். சமீபகாலமாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் அஜித், இத்தாலியில் சுருதிஹாசனை வைத்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். மேலும் இத்தாலியில் உள்ள அழகான இடங்களுக்கு சென்றும் புகைப்படம் எடுத்து வருகிறார்.

Post a Comment Blogger

 
Top