0
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது.

இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது.

Post a Comment Blogger

 
Top