0
குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்டம் கைகொ­டுக்க, தில்­ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது போட்­டியில் வெற்­றி­பெற்று அசத்­தி­யது.

பாகிஸ்தான் அணி வெற்றி இலக்­காக நிர்­ண­யித்த 288 ஓட்­டங்­களை இலங்கை அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 48.1 ஓவர்­களில் அடைந்து வெற்­றி­பெற்று, பாகிஸ்­தா­னுக்கு பதி­லடி கொடுத்­தது.

கண்டி பல்­லே­க­லையில் நேற்று நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பாகிஸ்தான் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 287 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.


பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக அசார் அலி மற்றும் அஹமட் ஷேசாட் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை இந்த ஜோடி உயர்­த்­தி­யது. அஹமட் ஷோசட் 30 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் பத்­தி­ர­னவின் பந்­து­வீச்சில் போல்ட் முறையில் ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றினார்.

அதன்­பி­றகு 2ஆவது விக்­கெட்­டிற்­காக மொஹமட் ஹபீஸ் கள­மி­றங்­கினார். இவர் 9 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று பெவி­லியன் திரும்­பினார். அடுத்­த­டுத்து வீரர்கள் ஆட்­ட­மி­ழந்த போதிலும், ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராகக் கள­மி­றங்­கிய அசார் அலி நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி 79 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் தில­க­ரத்ன தில்­ஷானின் பந்­து­வீச்சில் சிறி­வர்­த­ன­விடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார். இறு­தியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 287 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.


Kus5017 by r56149841

288 என்ற வெற்றி இலக்கை நோக்கிக் கள­மி­றங்­கிய இலங்கை அணியின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர்­க­ளான தில்ஷான் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அபா­ர­மாகச் செயற்­பட்­டனர். அதி­ரடி ஓட்ட சேர்க்­கையில் ஈடு­பட்ட குசல் 18 பந்­து­களில் அரைச்­சதம் பெற்றார். ஒரு கட்­டத்தில் இலங்கை அணி 7 ஓவர்­களில் 85 ஓட்­டங்கள் வரை பெற்­றி­ருந்­தது. 25 பந்­து­களில் 68 ஓட்­டங்­களைப் பெற்றார் குசல். தில்ஷான் 48 ஓட்­டங்­களைப் பெற்றார். அணித் தலைவர் மெத்­தியூஸ் மற்றும் திரி­மான்னே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

இறுதிவரை களத்தில் நின்ற சந்திமால் 48 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இலங்கை அணியின் இந்த வெற்றியோடு தொடர் 1–1 என்ற சமநிலையில் இருக்கிறது.

Post a Comment Blogger

 
Top