0
தமது திரு­மண புகைப்­ப­டங்கள் மங்­க­ள­க­ர­மாக இருக்க வேண்டும் என திரு­மண பந்­தத்தில் இணையும் ஜோடிகள் விரும்­பு­வது வழமை.ஆனால் மர­ணச்­ச­டங்­கு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை வழங்­கு­ப­வர்­க­ளாக பணி­யாற்றும் ஜென்னி டாய் மற்றும் தரென் செங் (30 வயது) ஆகியோர் தமது திரு­மணப் புகைப்­ப­டங்­களை சவப்­பெட்­டி­யொன்­றினுள் அமர்ந்தும் அதற்கு அருகில் நின்றும் எடுத்­துள்­ளனர்.



இந்த புகைப்­ப­டங்கள் சிங்­கப்­பூரில் புங்கொல் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

பிர­பல மர­ணச்­ச­டங்கு ஏற்­பாட்­டாளர் ஒரு­வரின் மக­ளான ஜென்னி, மரணம் தொடர்பில் சிறு­வர்­க­ளுக்­கான புத்­த­கங்­களை எழு­தி­யுள்ளார்.

மக்கள் வாழ்க்­கையின் அங்­க­மா­க­வுள்ள மரணம் குறித்து சௌக­ரி­ய­மாக உணர வேண்டும் என தாம் விரும்புவதாக ஜென்னியும் தரெனும் தெரிவித்தனர்.



Post a Comment Blogger

 
Top