0
தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டார் படங்களாக இருந்தாலும் சரி, சுமார் ஸ்டார் படங்களாக இருந்தாலும் சரி. எல்லா திரைப் பிரசவமும் ரத்த களறியான சிசேரியன் பிரசவமாகதான் இருக்கிறது. இன்று திரைக்கு வந்திருக்கும் மாரியும் அதற்கு விதிவிலக்கல்ல என்று நினைக்கும் போதுதான் ஷாக்கோ ஷாக்!
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தயாரிக்கும் படமே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிதான் வெளிவர வேண்டிய நிலைமை என்றால், எங்கு போய் முட்டிக் கொள்வது?
சரி போகட்டும்… என்னதான் நடந்தது? ராதிகா சரத்குமார், லிஸ்டின் தயாரிப்பில் வெளிவந்த முந்தைய படங்களின் பிரச்சனைகளை இந்த படத்தில் வந்து நின்றதாம். அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இந்த பொருளாதார பற்றாக்குறையை தீர்க்க பலவித சமரசங்கள் செய்ய வேண்டியிருந்ததாம். அந்த நேரத்தில் தனுஷின் சம்பளமும் வந்து இடிக்க, சார்… உங்க சம்பளத்துல இரண்டு கோடியை விட்டுக் கொடுத்தால் படம் வெளியே வந்துரும் என்று சொல்லப்பட்டதாம்.
எவ்வித முகச்சுளிப்பும் காட்டவில்லையாம் தனுஷ். ஓ.கே என்று கூறிவிட்டதாக தகவல். அதுமட்டுமல்ல, இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விற்கப்படவில்லை. தற்போது சேனல்களின் முடிவால் சேட்டிலைட் வியாபாரம் முற்றிலும் சேதமடைந்திருக்கிற சூழ்நிலை. அதிலும் ஒரு ஃபேவர் செய்திருக்கிறார் தனுஷ்.
தனது சம்பளத்திற்கு பதிலாக சேட்டிலைட் உரிமையை தன் பெயருக்கு மாற்றி வாங்கிக் கொண்டாராம். இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஹியூமன் பீயிங்…. வாழ்க தனுஷ்!

Post a Comment Blogger

 
Top