0
ஒரு படத்தில் நடித்தவருக்கு அப்படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்றால் அது அவரின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பாகும். அந்த வரவேற்பு சமீபத்தில் ‘பாபநாசம்’ படத்தில் கமலுடன் போட்டி போட்டு நடித்த ஆஷா சரத்துக்கு கிடைத்தது. இவரே ஒரிஜினல் மலையாள ‘த்ரிஷ்யத்தில்’ ஐ.ஜி. கீதா பிரபாகராக வந்து கலக்கியிருந்தார். பின்னர் பி.வாசு இயக்கிய கன்னட ‘த்ரிஷ்யா’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த மூன்று மொழிகளிலும் இவரது நடிப்புக்கு பலதரப்பிலும் பாராட்டு கிடைத்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் கமலுடன் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல் கொடுத்த பர்ஸ்ட் கிஸ் (ஸாரி) பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்புக்குள்ளானது.
இதில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் கமலுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஷா சரத் என தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது

Post a Comment Blogger

 
Top